முகப்பு
சிவகங்கை

திருப்புவனம்-பழையனூர்  சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

கடந்த மூன்று ஆண்டுகளாக பழுதடைந்து போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுத்தும் திருப்புவனம்-பழையனூர் சாலையைச்சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Updated On : 9 ஜூலை, 2018 at 7:01 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கடந்த மூன்று ஆண்டுகளாக பழுதடைந்து போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுத்தும் திருப்புவனம்-பழையனூர் சாலையைச்சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருப்புவனம் அருகே உள்ள நைனார்பேட்டை,வெள்ளக்கரை, அல்லிநகரம், சொக்கநாத இருப்பு, கீழராங்கியம், பூம்பிடாகை, வயல்சேரி, கரிசல்குளம், சிவனாங்குளம், புளியங்குளம், ஆலாத்தூர், ரெட்டகுளம், சங்கங்குளம், அச்சங்குளம், அழகுடையான், பழையனூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்கண்ட கிராமங்களின் வழியாக தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த சாலையானது கடந்த மூன்று ஆண்டுகளாக பழுதடைந்துள்ள நிலையில் உள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் அந்த வழித் தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் உரிய நேரத்திற்கு சென்று வரமுடிவதில்லை. இதனால், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள் தங்களது பணி நிமித்தமாக குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள திருப்புவனம்-பழையனூர் சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.