சிவகங்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகங்கையில் தமாகா ஆர்ப்பாட்டம்

DIN

சிவகங்கையில், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
      சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமாகா இளைஞரணியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் வி. சார்லஸ் ஜான்கென்னடி  தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் தீனதயாளன், மாநில இணைச் செயலர் அன்பில் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.     இதில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளு,க்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமாகா சிவகங்கை மாவட்டத் தலைவர் கே.கே. பாலசுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் கே.எம். மகாதேவன், மாநிலச் செயலர் ராஜலிங்கம் உள்பட அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT