மானாமதுரை அருகே மாட்டுவண்டி சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மாட்டுவண்டி சக்கரத்தில் சிக்கி விவசாயி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மாட்டுவண்டி சக்கரத்தில் சிக்கி விவசாயி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இவரது மகன் லிங்கராஜ் (35), விவசாயியான இவர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அருகில் உள்ள பெரியகோட்டை கள்ளர்குளம் கிராமத்திலிருந்து குப்பை மண்ணை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு இடைக்காட்டூருக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, மாட்டுவண்டியின் முன்பக்க பலகை உடைந்தது. இதில், கீழே விழுந்த லிங்கராஜ் மீது வண்டியின் சக்கரங்கள் ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.