சிவகங்கையில் மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் குண்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம், கூடைப் பந்து பயிற்சி, கையுந்து பந்து பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட விளையாட்டுத் துறை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இப்பயிற்சி முகாமில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் ஏராளாமானோர் பங்கேற்றுள்ளனர்.