சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 48 தூய்மைப் பள்ளிகளுக்கு விருது

DIN


சிவகங்கை மாவட்டத்தில் 2017-2018 ஆம் ஆண்டிற்கான தூய்மை பள்ளிகளுக்கான புரஸ்கார் விருதுகள் 48 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை தடுக்கவும் சுகாதாரமான கழிவறைகள், சோப்புடன் கூடிய கைகழுவும் வசதி, நடத்தை மற்றும் திறன் உயர்த்துதல் ஆகியன குறித்தும் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய வகையில் மாவட்ட அளவில் 48 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இப்பள்ளிகளுக்கு புரஸ்கார் விருதுகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து, 8 பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு, சான்றிதழ், 40 பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.பாலுமுத்து, சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.ரதிமாலா மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரிய,ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT