சிவகங்கை

எல்லைப் பிடாரி கோயிலில் செவ்வாய்சாட்டு விழா

DIN

மானாமதுரை எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் செவ்வாய்சாட்டு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதி பொதுமக்கள் தங்கள் வசிப்பட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காப்புகட்டி விரதம் தொடங்கினர். விழா நாட்களில் தினமும் எல்லைப் பிடாரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. 
விழாவின் முக்கிய வைபவமாக கடந்த வியாழக்கிழமை இரவு கிருஷ்ணராஜபுரம் பகுதி பெண்கள் அசைவ உணவு வகைகளை சமையல் செய்து மண்பானைகளில் வைத்து, அதில் தீபம் ஏற்றி பானைகளை தலையில் சுமந்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன்பின்  அசைவ உணவுகளை பிடாரி அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT