சிவகங்கை

திருப்பத்தூரில் இன்று "கிசான்' கடன் அட்டை வழங்கும் முகாம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை (ஆக.7) விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :  சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் செய்து வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட முன்னோடி வங்கியின் ஒருங்கிணைப்பில் முகாம் நடத்தி கிசான் கடன் அட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அந்தவகையில் ஆக. 7 ஆம் தேதி திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பயன்பெறும் வகையில் கிசான் கடன் அட்டை வழங்கும் முகாம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா மற்றும் அடங்கல், மீன்பிடித் தொழில் புரிவோர், மீன்பிடி தொழில் உரிமம் சார்ந்த ஆவணங்கள், குத்தகை முறையில் மீன்பிடி தொழில் செய்வோர், குத்தகை சார்ந்த ஆவணங்கள், அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள் ஆகியவை இணைக்க வேண்டும்.
இதேபோன்று வரும் ஆக. 9 இல் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஆக. 13 இல் கண்ணங்குடியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஆக. 14 இல் எஸ்.புதூரில் உள்ள சமுதாயக் கூடத்திலும், ஆக. 16 இல் காளையார்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஆக. 19 இல் மானாமதுரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஆக. 20 இல் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஆக. 21 இல் தேவகோட்டையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஆக. 22 இல் இளையான்குடியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஆக. 24 இல் திருப்புவனத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஆக. 26 இல் சிங்கம்புணரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஆக. 27 இல் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கிசான் கடன் அட்டை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT