சிவகங்கை

ரயிலில் சங்குகள் ஏற்றி வந்த இருவர் விசாரணைக்கு பின் விடுவிப்பு

DIN

ரயிலில் சங்குகள் கொண்டு வந்த இருவரை சிவகங்கை மாவட்ட வனத்துறை காவலர்கள் செவ்வாய்க்கிழமை விசாரணைக்குப் பின் விடுவித்தனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக சிவகங்கை ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். 
அப்போது ராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் ரயிலில் பரமக்குடியைச் சேர்ந்த சிவா, பாம்பனைச் சேர்ந்த கர்ணன் ஆகிய இருவரும் ரயிலில் சங்குகள் வைத்திருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து, அவர்கள் இருவரையும் சிவகங்கை மாவட்ட வனத்துறை காவலர்களிடம்  ஒப்படைத்தனர். வனத்துறை காவலர்கள் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரிடமும் அரசால் தடை செய்யப்பட்ட சங்குகள் இல்லை என்பது தெரியவந்தது. ஆகவே அவர்கள் இருவரையும் வனத்துறை காவலர்கள் விடுதலை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT