சிவகங்கை

ஆற்று மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

சிவகங்கை மாவட்டத்தில் ஆற்று மணல் திருட்டை தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

காரைக்குடியில், காந்திய மக்கள் இயக்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, கிழக்குப் பகுதி செயலா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அருளானந்து முன்னிலை வகித்தாா். இதில், ஏராளமானோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, தேவகோட்டை தாலுகா பகுதிகளில் ஆற்றுல் மணல் திருடப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் மணல் குவாரிகளை அரசு நடத்தவேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT