சிவகங்கை

மானாமதுரை கோயிலுக்கு மதுரையில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரை

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு மதுரையில் இருந்து பாத யாத்திரையாக பக்தர்கள் செவ்வாய்கிழமை வந்தடைந்தனர். 
 உலக மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று ஆனந்தத்துடன் வாழ வேண்டி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் ஏராளமான பக்தர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு பாதயாத்திரையாக மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு வருவது வழக்கம். 
 7 ஆவது ஆண்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இக் கோயில் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள், மாதாஜி ஆகியோர் தலைமையில் ஏராளமான பக்தர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து பாதயாத்திரை புறப்பட்டனர். வழியில் சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய இடங்களில் பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின் பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு வந்தடைந்த பக்தர்கள் அங்கு நடந்த சிறப்பு பூஜையிலும் இரவு கோயிலில் நடந்த திருவிளக்குப் பூஜை வழிபாட்டிலும் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT