சிவகங்கை

தேவகோட்டையில் ரத்தின வேல் தரிசனம்

DIN

தேவகோட்டையில் மாசி மகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ரத்தினவேல் தரிசனம் நடைபெற்றது.
    தேவகோட்டை நகரத்தார் குன்றக்குடியிலிருந்து ஆண்டு தோறும்  மாசிமகத்  திருநாளில் ரத்தின வேலை பெற்று, தேவகோட்டை நகரச் சிவன் கோயிலிருந்து வெள்ளித்தாம்பாளத்தில் பட்டுத்துணியின் மேல் வைத்து கோட்டையம்மன் கோயிலில் உள்ள  நகரப் பள்ளிக்கு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி நாற்பது வகை நகரத்தார்களில் அறங்காவலராக இருக்கும் சுப்பையா செட்டியார் சிவன் கோயிலிருந்து ரத்தின வேலை எடுத்து வந்தார். பாதை எங்கும் மாத்து எனப்படும் துணிகளை விரித்து  அதன்மேல் நடந்து வந்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் ரத்தின வேலுக்கு பன்னீரால் ஆண்கள் மட்டும் அபிஷேகம்செய்தனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT