சிவகங்கை

மடப்புரம் காளி கோயில் உண்டியல் திறப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
      இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோயிலில் அத்துறையின் பரமக்குடி உதவி ஆணையர் ராமசாமி, மடப்புரம் உதவி ஆணையர் செல்வி ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோயில் மண்டபத்தில் பகலில் தொடங்கி இரவு வரை காணிக்கைகள் எண்ணும் பணியில் மதுரை சத்யசாய் சமிதியைச் சேர்ந்த பக்தர்கள் ஈடுபட்டனர். இதில் ரொக்கம் ரூ. 32 லட்சத்து 99 ஆயிரத்து 975, தங்கம் 255 கிராம், வெள்ளி 471கிராம் காணிக்கைகள்  இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT