சிவகங்கை

திருப்பத்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பால்குட விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குட விழா  சனிக்கிழமை  நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குட விழா  சனிக்கிழமை  நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஆதித்திருத்தளிநாதர் ஆலயத்தில் கூடிய பக்தர்கள் அங்கிருந்து பால்குடம் ஏந்தி, சிவபெருமானை வழிபட்டு, நகரின் முக்கிய வீதிகளான பெரியகடைவீதி, செட்டிய தெரு, காளியம்மன்கோயில் தெரு வழியாக காளியம்மன் கோயிலை வலம் வந்து, முருகன் கோயிலை வந்தடைந்தனர். 
பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் முருகனுக்கு பாலாபிஷேகம் மற்றும் இளநீர், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. 
விழா ஏற்பாடுகளை முருகன் கோயில் கந்த ஷஷ்டி விழா குழுவினர் செய்திருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

நாடாளுமன்ற வளாகத்தில் பதாகையை ஏந்தி காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT