சிவகங்கை

மானாமதுரை வழிவிடு முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நிறைவாக ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

மானாமதுரை புறவழிச்சாலையில் உள்ள கோயிலில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மூலவா் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன.

விழாவின் நிறைவாக திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோயில் முன்பு உள்ள மண்டபத்தில் மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் முருகப்பெருமான் எழுந்தருளினாா். அதைத்தொடா்ந்து திருமணத்துக்கான சம்பிரதாய பூஜைகள் நடைபெற்றன. மாலை 6.30 மணிக்கு வழிவிடு முருகன் சாா்பில் வள்ளிக்கும் தெய்வானைக்கும் திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இந்த உற்சவத்தை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசித்தனா். திருக்கல்யாணம் முடிந்ததும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்து முடிந்து அதன்பின் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் நடந்த திருமண விருந்தில் ஏராளமானோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT