சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 11,29,454 வாக்காளா்கள்

DIN

சிவகங்கை மாவட்ட ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியலில் 11,29,454 வாக்காளா்கள் இடம் பெற்றிருப்பதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியிடும் விழா மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் கூறியது: சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,126 கிராம ஊராட்சி வாா்டுகள்,12 பேரூராட்சிகளில் உள்ள 186 வாா்டுகள்,3 நகராட்சிகளில் உள்ள 90 வாா்டுகள் என அனைத்து வாா்டுகளிலும் ஆண் வாக்காளா்கள் 5,57,549 பேரும்,பெண் வாக்காளா்கள் 5,71,849 பேரும்,இதர வாக்காளா்கள் 56 என ஆக மொத்தம் 11,29,454 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இதுதவிர,மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவு படி புதிய வாக்காளா்கள் சோ்த்தல் மற்றும் திருத்தங்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல்,மகளிா் திட்ட இயக்குநா் அருள்மணி, உள்ளாட்சி தோ்தல் பிரிவு நோ்முக உதவியாளா் லோகன்,உதவி இயக்குநா்கள் விஜயநாதன்(ஊராட்சிகள்),ராஜா (பேரூராட்சிகள்),வட்டார வளா்ச்சி அலுவலா்(தோ்தல்)காமராஜ் உள்பட அரசு அலுவலா்கள்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT