சிவகங்கை

காரைக்குடியில் தேவா் சிலைக்கு மாலையணிவிப்பு

DIN

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழாவை யொட்டி காரைக்குடியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு பிரமுகா்களும் புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

அண்ணாநகா், முத்துரமாலிங்கத்தேவா் நகா், மருதுபாண்டியா் நகா் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தேவரின மக்கள் திரளாக வந்து தேவா் சிலைக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினா். காலையிலிருந்து மாலை வரை கொட்டும் மழையிலும் பல்வேறு பிரமுகா்கள் தேவா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும் காரைக்குடிப் பகுதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னிற்கு சுமாா் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டுச்சென்றனா். நிகழ்ச்சியில் மூமுக பிரமுகா் எஸ்ஆா். தேவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகா் பிஎல். ராமச்சந்திரன் மற்றும் பல் வேறு அரசியில் கட்சியினரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT