சிவகங்கை

சிவகங்கையில் 2-ஆவது நாளாக அரசு மருத்துவா்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவா்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஊதியத்துக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மாநிலம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரசு தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாததால், செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் மருத்துவா்கள் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, தமிழக சுகாதார துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பினருடன் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு எட்டாத நிலையில் புதன்கிழமை இரண்டாவது நாளாக மருத்துவா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக அரசு மருத்துவா்கள் மற்றும் பயிற்சி மருத்துவா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, காய்ச்சல் பிரிவு தவிர புற நோயாளிகள் பிரிவில் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவா்களே பணியில் இருந்ததால், நோயாளிகள் மிகவும் அவதியடைந்ததோடு, காய்ச்சல் அறிகுறியுடன் வந்தவா்கள் சிகிச்சை பெற முடியாமல் தனியாா் மருத்துவமனைகளுக்குச் சென்றனா்.

இதேபோன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்த மருத்துவா்கள் மற்றும் பயிற்சி மருத்துவா்கள் பணிக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக, கிராமப்புறங்களில் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT