சிவகங்கை

கீழடியில் அகழாய்வு குழிகளில் மழைநீர்: மோட்டார் மூலம் வெளியேற்றம்

DIN

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு குழிகளில் மழைநீர் நிரம்பியுள்ளதால் புதன்கிழமை தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்தது.
  கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் இதுவரை 5 பேர்களின் நிலங்களில் 33 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.  இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருள்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உள்பட 800-க்கும் மேற்பட்ட பொருள்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டன.
 இம்மாத இறுதியில்  அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளது. மேலும் 6 ஆம் கட்ட அகழாய்வுக்கான இடங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந் நிலையில், கடந்த சில நாள்களாக கீழடி பகுதியில்  தொடர்ந்து மழை பெய்தது. 
 இதனால் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட  குழிகள் தண்ணீரால் நிரம்பியுள்ளன. இதையடுத்து மோட்டார் மூலம் குழிகளில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT