சிவகங்கை

திருப்பத்தூர் கோயில்களில்  நவராத்திரி விழா தொடக்கம்

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பூமாயிஅம்மன் கோயில், திருத்தளிநாதர் ஆலயம், நின்ற நாராயணப் பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் நவராத்திரி திருவிழா  ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, லட்சார்ச்சனை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, நவராத்திரி விழா தொடங்கியது. இதில், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் உற்சவ அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழா நாள்கள் முழுவதும் மாலையில் லட்சார்ச்சனை நடைபெற்று, அம்மன் தெய்வானை, சமயபுரமாரியம்மன், ஊஞ்சல், தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி, பள்ளிகொண்ட பெருமாள், மகிஷாசுரமர்த்தினி, சிவபூஜை ஆகிய தோற்றங்களில் காட்சியளிக்கிறார்.
தொடர்ந்து, அக்டோபர் 8 இல் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, அம்பு எய்தல் நடைபெற உள்ளது. அதேபோல், திருத்தளிநாதர் மற்றும் நின்ற நாராயணப் பெருமாள் கோயில்களிலும் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்று, கொலுப் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு நவராத்திரி விழா தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT