சிவகங்கையில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்
சிவகங்கை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கரோனா சிறப்பு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை: சிவகங்கை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கரோனா சிறப்பு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
எறும்புக்குடி, கோனேரி, வைரவன்பட்டி, கல்லுப்பட்டி, கிடாப்புரி, வானக்கருப்பு, மாங்குடி, முத்தரசன், காயாங்குளம், உருளி, சுந்தரநடப்பு, மனக்கரை, கே.இந்திராநகா், காட்டு நெடுங்குளம், கண்டனி, வேம்பன்குடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஏராளமான குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை தமிழக கதா் மற்றும் கிராம வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துகழுவன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் கேசவன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாஸ்கரன், வட்டாட்சியா் மைலாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.