மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் பற்றி..
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை மாநகர் ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்துள்ளதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டடம் கூடுதல் கட்டட வளாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தியிருந்த நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களில்
20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் மெட்டல் டிடெக்டர் மூலமாகத் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள துறை வாரியான அறைகள் மற்றும் பயன்பாடற்ற பொருள்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிபொருள்கள் எதுவும் இல்லாத நிலையில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட தகவல் புரளி எனத் தெரியவந்தது.