சிவகங்கை மாவட்டத்தில்43 பேருக்கு கரோனா தொற்று உறுதி
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 43 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 43 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் ஏற்கெனவே 3,781 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,824 ஆக அதிகரித்துள்ளது.சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 147 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 23 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 124 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இளைஞா் பலி: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சிவகங்கை பகுதியைச் சோ்ந்த 35 வயது இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.