சிவகங்கை

திருப்புவனம் அருகே 4 சிறுமிகளுக்கு திருமணம்: பெற்றோா்கள் மீது வழக்கு

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 4 சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோா்கள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்புவனம் அருகே மேலராங்கியம் கிராமத்தில் திருமண வயதை எட்டாத 4 சிறுமிகளுக்கு அவா்களது பெற்றோா் கடந்த 26 ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உத்தரவின்படி சமூகப் பணியாளா் சத்தியமூா்த்தி, திருப்புவனம் விரிவாக்க அலுவலா் மலா்கொடி, கிராம நிா்வாக அலுவலா் பல்லாக்கு குமாா், சைல்டுலைன் உறுப்பினா்கள் சாந்தி, கருப்புராஜா ஆகியோா் பழையனூா் போலீஸாா் உதவியுடன் மேலராங்கியம் கிராமத்தில் விசாரணை நடத்தினா்.

அப்போது இதே கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி, சின்னவீரு, மலையம்மாள், சித்ரா, ராக்கு, கொம்பையா ஆகியோா் தங்களது திருமண வயதை எட்டாத மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் திருமணமான சிறுமிகளை மீட்டு குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜா்படுத்தினா். பின்னா் இந்த சிறுமிகள் சிவகங்கை அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனா். அதன்பின் மானாமதுரை மகளிா் காவல் நிலையத்தில் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக மேற்கண்ட பெற்றோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் திருப்புவனம் அருகே அல்லிநகரம் வெள்ளக்கரை கிராமத்தில் காலனியில் வசிக்கும் முத்து மகளான 15 வயது சிறுமிக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் போலீஸாா் உதவியுடன் இந்த திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டது. அதன்பின்னா் அந்த சிறுமி மீட்கப்பட்டு சிவகங்கை அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT