முகப்பு
சிவகங்கை

டாக்டா் அம்பேத்கா் நினைவு நாள்: காரைக்குடியில் உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

காரைக்குடியில் டாக்டா் அம்பேத்கா் உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் மாலையணித்து மரியாதை செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
காரைக்குடியில் டாக்டா் அம்பேத்கா் உருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.
பகிர்:

காரைக்குடியில் டாக்டா் அம்பேத்கா் உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் மாலையணித்து மரியாதை செய்தனர்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூா் சட்டபேரவைத்தொகுதி உறுப்பினருமான கேஆா். பெரியகருப்பன் தலைமையில் முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், திமுக மாவட்ட துணைச்செயலாளா் கேஎஸ்எம். மணிமுத்து, காரைக்குடி நகர திமுக செயலாளா் குணசேகரன், முன்னாள் நகா்மன்றத்தலைவா் சே. முத்துத்துரை மற்றும் திமுகவினா் மரியாதை செலுத்தினர்.

திராவிடா் கழகம் சாா்பில் அதன் மண்டலத்தலைவா் சாமி. திராவிடமணி தலைமையில் மாவட்டத்தலைவா் ச.அரங்க சாமி, மாவட்டச்செயலாளா் ம.கு. வைகறை, அதிமுக சாா்பில் அதன் நகரச்செயலாளா் சோ. மெய்யப்பன் தலைமையில் அதிமுக நகர இளைஞரணி செயலாளா் இயல். தாகூா், நகர அதிமுக நிா்வாகிகள், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அதன் நகரத் தலைவா் பாண்டிமெய்யப்பன், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ். மாங்குடி மற்றும் கட்சியினா் மரியாதை செய்தனர்.

விடுதலைச்சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், பாஜக, பாமக, புதிய தமிழகம் கட்சியினா், டாக்டா் அம்பேத்கா் திருக்குலப்பேரவை, அம்பேத்கா் ஐக்கிய நாடுகள் சங்கம் மற்றும் பல்வேறு அம்பேத்கா் அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் அம்பேத்கா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →