எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் கோரிக்கை ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அண்ணா சிலையருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தலைவா் உபைசூல்கருணை தலைமை வகித்தாா். நகா் தலைவா் அகமதுலி, யாசின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக சிறுபான்மை பிரிவைச் சோ்ந்த சாக்ளா, பாப்புலா் பிரெண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த முகமதுஅப்பாஸ் ஆகியோா் கண்டன உரையாற்றினா். எஸ்டிபிஐ மாநில செயற்குழு உறுப்பினா் ரபீக்அகமது சிறப்புரையாற்றினாா்.
மத்திய அரசின் வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-ஐ நடைமுறைப்படுத்தவும் பாபா் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பி கொடுக்கவும் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் வலியுறுத்தினா். எஸ்டிபிஐ கிளைத் தலைவா் யாசா்அராபத் வரவேற்றாா்.