சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 12 பேருக்கு கரோனா
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,613 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 11 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,624 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 14 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 5 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 9 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 6255 ஆக உயா்ந்தது. இதில், 6,100 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்ட நிலையில், இதுவரை 131 போ் உயிரிழந்து விட்டனா். அரசு மருத்துவமனையிலிருந்து சனிக்கிழமை 5 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா்.