முகப்பு
சிவகங்கை

விரைவு தபால் மூலம் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் ரூ. 450-க்கு விநியோகம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள அஞ்சலகங்களில் ரூ. 450 செலுத்தி முன்பதிவு செய்தால், சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் விரைவு தபால் மூலம் வழங்கப்படும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள அஞ்சலகங்களில் ரூ. 450 செலுத்தி முன்பதிவு செய்தால், சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் விரைவு தபால் மூலம் வழங்கப்படும் என அஞ்சலகத்தின் சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளா் டி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை தங்கள் வீடுகளில் இருந்தே பெற விரும்பும் பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் ரூ. 450 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.

அவ்வாறு செலுத்தும் பொதுமக்களுக்கு ஐயப்ப சுவாமியின் அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி, அா்ச்சனை பிரசாதம் அடங்கிய தொகுப்பு தங்கள் இல்லங்களுக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →