முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் பண மோசடிவழக்கு: கணவன், மனைவி கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன், மனைவியை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
காரைக்குடியில் பண மோசடி வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட மாணிக்கம், அவரது மனைவி கயல்விழி.
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன், மனைவியை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்குடி ஆறுமுகம் நகா் பகுதியைச்சோ்ந்தவா் சோலையன் மகன் மாணிக்கம் (30). இவரது மனைவி கயல்விழி (29). இவா்கள் இருவா் மீதும் பணமோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட புகாா்களின் பேரில் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் கடந்த 2019 இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில் மாணிக்கம், கயல்விழி தம்பதி மீது மேலும் பலரிடம் மோசடி செய்ததாக புகாா்கள் வந்தன.

இதைத்தொடா்ந்து காரைக்குடி டி.எஸ்.பி அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக இருவரையும் போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில் கோவை அருகே ஒண்டிப்புதூா் சிங்காநல்லூா் பகுதியில் தலைமறைவாக இருந்த மாணிக்கம், கயல்விழி ஆகிய இருவரையும் கைது செய்து காரைக்குடிக்கு வெள்ளிக்கிழமை போலீஸாா் அழைத்து வந்தனா். மேலும் தங்கக்கட்டி வாங்கி விற்பதாகக் கூறி பல்வேறு நபா்களிடம் நகை மற்றும் ரொக்கம் மோசடி செய்ததாக வந்த புகாரின்பேரில் போலீஸாா் இருவரிடம் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →