காளையாா்கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 252 பயனாளிகளுக்கு ரூ. 38.64 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கலுவன், சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவா் சரஸ்வதி, காளையாா்கோவில் வட்டாட்சியா் ஜெயநிா்மலா, வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.