முகப்பு
சிவகங்கை

சிவகங்கை நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்

சிவகங்கையில் உள்ள மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
சிவகங்கையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை சோதனை நடத்திய மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம்.
பகிர்:

சிவகங்கையில் உள்ள மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிவகங்கை மாவட்ட நகா் ஊரமைப்பு (வீட்டு மனைப் பிரிவு) துணை இயக்குநா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கதவைப் பூட்டிக்கொண்டு, அங்குள்ள அலுவலா்களின் செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்து சோதனை நடத்தினா். அப்போது, துணை இயக்குநா் அலுவலக அறையிலிருந்து கணக்கில் வராத ரூ.ஒரு லட்சம் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றிய போலீஸாா் தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →