சிவகங்கை

சிவகங்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூ.மாவட்டச் செயற்குழு கூட்டம்

சிவகங்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினா் அய்யம்பாண்டி தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்டச் செயலா் வீரபாண்டி முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையை திறக்க வேண்டும். காரைக்குடியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசின் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் சாமுவேல் ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் தண்டியப்பன், முத்துராமலிங்க பூபதி, கருப்புசாமி, ஆறுமுகம், திருநாவுக்கரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT