வளைகுடா நாடுகளின் வங்கிகள் தாக்கப்படும்! - ஈரானின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்!
வளைகுடா நாடுகளின் வங்கிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் படைகள் அறிவிப்பு...
வளைகுடா நாடுகளின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு வங்கி மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவத்தின் கூட்டுத் தலைமையான கதம் அல்-அன்பியா புதன்கிழமை (மார்ச் 11) அறிவித்துள்ளது.
ஈரான் படைகளின் இந்த அறிவிப்பால், பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை, சௌதி அரேபியா மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Iran announced that attacks will be targeted at banks and financial institutions in Gulf countries.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.