அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு!
வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானிய படைகள் அறிவித்துள்ளன...
ஓமன், சிரியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக, ஈரானின் புரட்சிகர காவல் படையினர் அறிவித்துள்ளனர்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களால் கடந்த பிப்.28 அன்று தொடங்கிய போரானது ஜூன் மாதம் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆனால், ஹோர்முஸ் நீரிணை அருகில் வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். இதனால், இருதரப்பும் மீண்டும் போர் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், குவைத் நாட்டிலுள்ள அமெரிக்க ஏவுத்தளங்கள், ஆயுதக்கிடங்குகள் மற்றும் ஓமன் நாட்டிலுள்ள ரேடார் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளதாக, ஈரானின் புரட்சிகர காவல் படைகள் இன்று (ஜூலை 17) அறிவித்துள்ளன.
இதுபற்றி, ஈரானிய படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஆபரேஷன் நாஸர் 2-வின் 11, 12 மற்றும் 13 ஆவது அலைத் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. 11 ஆவது அலை ஈரான்ஷாஹ்ரிலுள்ள பம்பூரில் கொல்லப்பட்ட ஈரானிய வீரர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் மூலம் சிரியாவின் அல்-டன்ஃப் பகுதியிலுள்ள அமெரிக்க சிறப்பு படையின் தலைமையகத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளோம். அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக குவைத்தில் அமெரிக்க படைகளுக்குச் சொந்தமான தளத்தின் மீதும், ஏவுகணைக் கண்காணிப்பு ரேடார்கள், ஏராளமான ஆயுதக்கிடங்குகள், ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், ஓமன் நாட்டிலுள்ள அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பு ரேடார் மற்றும் அமெரிக்க விமானப் படையின் ரேடார்களும் தாக்கி முழுவதுமாக அழிக்கப்பட்டதாக ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது.
Iran has announced that it has carried out attacks on US bases in Gulf countries.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.