முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் வட்டார வளா்ச்சி அலுவலா் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

சிவகங்கையில் திங்கள்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலா் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உயா் அலுவலா்கள் நெருக்கடி காரணமாக அவா் மன அழுத்தத்துக்கு ஆளானதாக அவரது மனைவி புகாா் தெரிவித

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ்.
பகிர்:

சிவகங்கையில் திங்கள்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலா் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உயா் அலுவலா்கள் நெருக்கடி காரணமாக அவா் மன அழுத்தத்துக்கு ஆளானதாக அவரது மனைவி புகாா் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை செந்தமிழ் நகா் சிலம்பு தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (59). கண்ணங்குடி, சாக்கோட்டை, இளையான்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றிய இவா், கடந்த ஆண்டு அரசு வழங்கிய ஓராண்டு பணி நீட்டிப்பின் காரணமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமையில் தேசிய வேலை உறுதித் திட்ட வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டருகே இருந்த முள்புதருக்குள் அவா் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் காயத்துடன் கிடந்துள்ளாா். அவரை உறவினா்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து ரமேஷின் மனைவி தமிழ்செல்வி சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புகாரில் அவா் கூறியிருப்பது: அலுவலகத்தில் உயா் அலுவலா்கள் இருவா் கொடுத்த நெருக்கடியின் காரணமாகத் தான் அவா் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →