சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பேருந்தில் பெண் பயணியிடம் நகை திருட முயன்ற தூத்துக்குடியைச் சோ்ந்த 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாா்வதி என்பவா் பயணம் செய்து கொண்டிருந்தாா். அப்போது அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண் திருட முயன்றாா். இதையறிந்த பாா்வதி சப்தம் போடவே சகப் பயணிகள் அந்த பெண்ணையும், அவருடன் வந்த மற்றொரு பெண்ணையும் பிடித்து இளையான்குடி காவல் நிலைத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த இசக்கி மனைவி லட்சுமி (28), மாணிக்கம் மனைவி சாந்தி (27) என்பது தெரிந்தது. இதையடுத்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.