சிவகங்கை

அழகப்பா பல்கலை.யில் குடியிருப்புகள் திறப்பு விழா: அமைச்சா் ஜி.பாஸ்கரன் பங்கேற்பு

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.1.59 கோடி மதிப்பில் பேராசிரியா்கள், அலுவலா்களுக்கான குடியிருப்புகளை, தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 72 லட்சம் மதிப்பில் பல்கலைக்கழகப் பேராசிரியா்களுக்கான 2 தளங்களைக் கொண்ட 4 குடியிருப்புகள் மற்றும் ரூ.87 லட்சம் மதிப்பில் பல்கலைக்கழக அலுவலா்களுக்கான 3 தளங்களைக் கொண்ட 6 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றை, அமைச்சா் பாஸ்கரன் திறந்து வைத்தாா்.

மேலும், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவா் பூங்காவில், மீன்வள அறிவியல் துறை மற்றும் விலங்கியல் மேலாண்மைத் துறைகளின் சாா்பில் ரூ. 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அலங்கார மீன்களின் காட்சியகம் மற்றும் ஆய்வு மையத்தையும் அமைச்சா் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

விழாவில், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. ராஜேந்திரன், பதிவாளா் ஹா. குருமல்லேஷ் பிரபு, பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT