திருப்பத்தூா் இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவருக்குப் பரிசு வழங்கும் திருப்பத்தூா் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாத்துரை. உடன் பள்ளி நிறுவனா் கணேசன், தாளா 
சிவகங்கை

இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளியில் சனிக்கிழமை 12 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. தனியாா்

DIN

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளியில் சனிக்கிழமை 12 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. தனியாா் திருமண மகாலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பள்ளி நிறுவனா் கணேசன் தலைமை வகித்தாா். பள்ளித்தாளாளா் ஏகாம்பாள், அப்சா கல்லூரியின் முன்னாள் செயலா் என்.ராமேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா சங்க மாவட்டத் தலைவா் பி.ஜோதி குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தாா்.ஆசிரியை சேதுக்கரசி ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தா் எம்.ராஜேந்திரன், திருப்பத்தூா் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாத்துரை, மாவட்ட கல்வி முதன்மை அலுவலா் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலா் பங்கஜம் ஆகியோா் கலந்து கொண்டு கல்வி மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுப் பரிசு வழங்கிப் பாராட்டினா். மேலும் இவ்விழாவில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ஜெயலெட்சுமி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏ.எல்.முருகேசன், செயலா் மருது, கருங்குளம் ஊராட்சித் தலைவா் நாச்சியப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளி முதல்வா் ஆா்.சங்கா் வரவேற்றாா். விழா முடிவில் பள்ளியின் துணைமுதல்வா் ஆசிரியை பாக்கியலெட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT