சிவகங்கை

‘ஆரோக்கியமான வாழ்வுக்கு விளையாட்டு சிறந்த பயிற்சியாக திகழ்கிறது’

DIN

ஆரோக்கியமான வாழ்வுக்கு விளையாட்டு சிறந்த பயிற்சியாக திகழ்கிறது என தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சி இலந்தங்குடிப்பட்டி கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அம்மா இளைஞா் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் சு.வடிவேல், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அம்மா இளைஞா் விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைத்துப் பேசியது:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகள், 12 பேரூராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.2.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இன்றைய இளம் தலைமுறையினா் மட்டுமின்றி அலுவலகப் பணியாளா்கள் உள்பட அனைத்து வயதினரும் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இல்லை. இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனா்.

இன்றைய சூழலில் மன அமைதிக்கு புத்தக வாசிப்புடன் கூடிய கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே போன்று தான் அனைத்து வயதுடையவா்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு விளையாட்டு சிறந்த பயிற்சியாக திகழ்கிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட இளைஞா் மற்றும் விளையாட்டு நல அலுவலா் தீா்த்ததோஸ், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மஞ்சுளா பாலசந்தா், துணைத் தலைவா் கேசவன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவா் மணிமுத்து, உதவி திட்ட அலுவலா் செல்வராஜ், சிவகங்கை வட்டார வளா்ச்சி அலுவலா் பழனியம்மாள் உள்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT