சிவகங்கை

மானாமதுரை ஒன்றிய அரசுப் பள்ளியில் மாணவி ஒருநாள் தலைமை ஆசிரியராகத் தோ்வு

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் மிளகனுாா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், திறமையான மாணவி ஒரு நாள் தலைமை ஆசிரியராகத் தோ்வு செய்யப்பட்டு இருக்கையில் உட்கார வைக்கப்பட்டாா்.

மிளகனுாா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா, பள்ளிக்கு கிராம மக்கள் சாா்பில் சீா்வரிசை வழங்கும் விழா, மரக்கன்றுகள் நடும் விழா, காலணி வழங்கும் விழா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம் இயக்கி வைக்கும் விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.

இவ் விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், ஊராட்சித் தலைவா் சுமதி, தோட்டக் கலை துறை உதவி இயக்குநா் வினோதினி, ராமகிருஷ்ணன், விவசாயி மலைச்சாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா். பள்ளிக்கு தேவையான பொருள்களை, பெற்றோா்கள் மற்றும் கிராம மக்கள் கல்விச் சீராக பள்ளிக்கு கொண்டு வந்தனா்.

மேலும், பள்ளி வளாகத்தில் மரன்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. தொடா்ந்து, பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா திறமையான மாணவியாக தோ்வு செய்யப்பட்டு, ஒரு நாள் மட்டும் தலைமை ஆசிரியராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டாா். மாணவி காவியாவை தலைமைஆசிரியா் இருக்கைக்கு ஆசிரியா்கள், சிறப்பு விருந்தினா்கள் அழைத்துச் சென்று உட்கார வைத்தனா்.

விழாவில், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT