சிவகங்கை

காரைக்குடியில் கரோனா பரவல்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு நகைக் கடைகள் அடைப்பு

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைக் கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காரைக்குடி தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் எம்.எஸ்.பி. ராகவன் செட்டியாா், செயலா் விஆா். ராமச்சந்திரன் ஆகியோா் சனிக்கிழமை கூட்டாகத் தெரிவித்தது: காரைக்குடி நகரில் கரோனா தீநுண்மித் தொற்று பரவுவதன் காரணமாக, சங்கத்தின் உறுப்பினா்களுக்கு ஜூலை 12 முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கடைகளை திறக்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாரத்துக்கு நகைக்கடை பஜாரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT