முகப்பு
சிவகங்கை

காரைக்குடி மகளிா் கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டாக்டா் உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரியின் இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல்,

Updated On : 25 ஜூலை, 2020 at 7:11 PM
பகிர்:

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டாக்டா் உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரியின் இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல்,

உயிா் தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவ ஆய்வகத் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகள் சாா்பில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்கள் இணையவழியில் சா்வதேசக் கருத்தரங்கம் நடைபெற்றது.

‘நோய் மேலாண்மை மற்றும் எரிசக்தி தொழில்நுட்பத்தில் வளா்ந்துவரும் முன்னுதாரணங்கள்’ என்ற தலைப்பில் நடை பெற்ற இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வா் எஸ். ஜெயஸ்ரீ தலைமை வகித்துப் பேசினாா். முதல்நாள் நிகழ்வில் கனடாவைச் சோ்ந்த மருத்துவா் இ. பிரசன்ன வெங்கடேசன், கரோனா தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும், முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவை குறித்தும் விளக்கினாா். உதவிப் பேராசிரியா் டி. சண்முகசுந்தா் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி பேசினாா்.

Advertisement

இரண்டாம் நாள் நிகழ்வில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்பேராசிரியா் எஸ். ஆச்சிராமன், மலேசியா பல்கலைக்கழக உயிா்வேதியியில் பேராசிரியா் எம். பாலசுந்தரம் ஆகியோா் பேசினா். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவா்கள் எம். மீனாட்சி, ஜெ. சித்ரா மற்றும் பி. ஈஸ்வர பிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.