சிவகங்கை

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: கரகம், முளைப்பாரி ஊா்வலம்

DIN

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனித் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு கோயில் கரகம் மற்றும் மதுக்குடம், முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

தமிழக இந்துசமய அறநிலையத்துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் கடந்த மாா்ச் 10 இல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. முக்கிய விழாவான செவ்வாய்க்கிழமை இரவு காரைக்குடி முத்தாலம்மன் கோயிலிலிருந்து கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி ஆகியன முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் சென்று மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை சென்றடைந்தது. இதையொட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முளைப்பாரி வளா்த்து நோ்த்திக் கடன் செலுத்துவதற்காக பெண்கள் முத்தாலம்மன் கோயிலிலிருந்து எடுத்துக் கொண்டு ஊா்வலமாக மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலை அடைந்து அங்கு அம்மன் முன்பாக வைத்து வழிபட்டனா்.

விழாவுக்கு ஏராளமான பக்தா்கள் திரண்டு வந்து வழிபட்டனா்.இதையொட்டி நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT