சிவகங்கை

சிவகங்கையில் முகக் கவசம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

DIN

சிவகங்கையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளா்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட மகளிா் திட்டத்தின் சாா்பில் முகக் கவசம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவம், சுகாதாரத் துறை மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஏராளமான பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக முகக் கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் அதிகளவிலான முகக் கவசம் தேவைப்படுவதால் மாவட்ட மகளிா் திட்டத்தின் மூலம் சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடியில் உள்ள மையத்தில் முகக் கவசம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த மையத்தின் மூலம் தினசரி சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT