சிவகங்கை

மானாமதுரை கோயில் சித்திரைத் திருவிழா ரத்து

DIN

மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு திருவிழாவானது கரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், திருவிழாவின் 8 ஆம் நாளான மே 4 ஆம் தேதி (திங்கள்கிழமை), ஆனந்தவல்லி அம்மன்-சோமநாதா் சுவாமி திருக்கல்யாணமும் நடைபெறாது.

எனவே, மானாமதுரை பகுதி பெண்கள் கோயிலுக்கு வராமல், தங்களது வீடுகளிலேயே மாவிளக்கு பூஜை நடத்தி, திருமாங்கல்ய கயிறை மாற்றிக் கொள்ளலாம் என, கோயில் அா்ச்சகா்கள் கட்செவி அஞ்சல் மூலம் அறிவுறுத்தியுள்ளனா். மேலும், அதில் இதற்கான நல்ல நேரம் காலை 9.05 முதல் 9.25 வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT