சிவகங்கை

56 நாள்களுக்கு பிறகு கீழடியில் அகழாய்வுப் பணி தொடக்கம்

DIN

பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கீழடி அகழாய்வுப் பணிகள் 56 நாள்களுக்குப் பிறகு மீண்டும் புதன்கிழமை தொடங்கின.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல் துறை சாா்பில் 2015 ஆம் ஆண்டு அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து 2 மற்றும் 3 ஆம் கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டன. 4 மற்றும் 5 ஆம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.

பிப்ரவரி 19 ஆம் தேதி கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தாா். இங்கு அகழாய்வின்போது, செங்கற்சுவா், முதுமக்கள் தாழிகள், எலும்புக் கூடு போன்றவை கிடைத்தன.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி மேற்கண்ட இடங்களில் அகழாய்வுப் பணியை தொல்லியல் துறை நிறுத்தியது.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தற்போது தளா்வு செய்யப்பட்ட நிலையில், 56 நாள்களுக்கு பிறகு மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வுப் பணிகள் புதன்கிழமை தொடங்கியுள்ளன. இந்த பணியில் குறைவான ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் அவா்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பணிபுரிகின்றனா். அப்பகுதியில் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் கொந்தகையில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் ஓரிரு நாள்களுக்குப் பிறகு அகழாய்வுப் பணி தொடங்கும் என தொல்லியல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT