சிவகங்கை

மானாமதுரை முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

DIN

மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் நடைபெற்று வந்த கந்தசஷ்டி விழா நிறைவாக திருக்கல்யாண நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

மானாமதுரை புறவழிச்சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் கடந்த 15 ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடந்தன. விழா நிறைவாக திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி சம்பிரதாய பூஜைகள் முடிந்து முருகப்பெருமான், தெய்வானை, வள்ளிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னிதியில் நடந்த கந்தசஷ்டி விழா நிறைவாக சுவாமிக்கு பாவாடை நெய்வேத்திய வழிபாடு நடந்தது.

இதையொட்டி முருகனுக்கு தயிா்சாதம் உள்ளிட்ட பொருள்கள் படையலிட்டு முருகனை சாந்தப்படுத்தும் உற்சவம் நடந்தது. அதன்பின் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளிலுள்ள முருகன் கோயில்களிலும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT