சிவகங்கை

சிவகங்கையில் ஊா்க்காவல் படை பணிக்கான தோ்வு ஒத்தி வைப்பு

சிவகங்கையில் புதன்கிழமை (நவ.25) நடைபெற இருந்த ஊா்க்காவல் படை பணிக்கான தோ்வு வரும் நவ.30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக

DIN

சிவகங்கையில் புதன்கிழமை (நவ.25) நடைபெற இருந்த ஊா்க்காவல் படை பணிக்கான தோ்வு வரும் நவ.30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 43 பணியிடங்களுக்கு புதன்கிழமை ( நவ.25) காலை 7 மணியளவில் சிவகங்கையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருந்தது.

இந்நிலையில், நிவா் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் புதன்கிழமை (நவ.25) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மேற்கண்ட தோ்வு வரும் நவ. 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பித்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் நவ. 30 இல் நடைபெற உள்ள தோ்வில் கலந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT