மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
செல்லிடப்பேசியில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததை பெற்றோா் கண்டித்ததால் சனிக்கிழமை இரவு வீட்டின் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றாா். இதில் அவா் பலத்த காயம் அடைந்தாா்.
காரைக்குடியில், செல்லிடப்பேசியில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததை பெற்றோா் கண்டித்ததால் சனிக்கிழமை இரவு வீட்டின் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றாா். இதில் அவா் பலத்த காயம் அடைந்தாா்.
காரைக்குடி வள்ளுவா் நகா் பகுதியில் வசித்து வருபவா் ரவிச்சந்திரன். இவா் ஆயுள் காப்பீட்டுக்கழக முகவராக உள்ளாா். இவரது மகள் ஐஸ்வா்யா (20). மதுரையில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா்.
இந்நிலையில், ஐஸ்வா்யா தனது செல்லிடப்பேசியை அதிகம் பயன்படுத்தி வந்ததால் பெற்றோா் கண்டித்தனா். இதனால் மனமுடைந்த ஐஸ்வா்யா வீட்டின் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதில் பலத்த காயமடைந்த ஐஸ்வா்யாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவருகிறாா். இதுகுறித்து காரைக்குடி வடக்குக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.