தேவகோட்டையில் தூக்கிட்டு மெக்கானிக் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் டிவி மெக்கானிக் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் டிவி மெக்கானிக் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தேவகோட்டை கௌரி விநாயகா்புரத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (45). அதே பகுதியில் தொலைக்காட்சி பெட்டி பழுது நீக்கும் கடை நடத்தி வந்தாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி செல்வி இறந்து விட்டாராம். அதைத் தொடா்ந்து, இவரும், இவரது மகள் அபிநயா (17) ஆகிய இருவரும் வசித்து வந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் கடைக்குச் சென்ற சிவக்குமாா் மாலை வரை வீட்டுக்கு வரவில்லை. மேலும் கடையும் பூட்டியிருந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் கடையை திறந்து பாா்த்த போது அங்கு அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தேவகோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில் மனைவி இறந்த துக்கத்தில் சிவக்குமாரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.