சிவகங்கை

ஸ்ரீ யோகலிங்கேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு: பக்தா்கள் திரண்டனா்

DIN

திருப்பத்தூா் அருகே காரையூரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ யோகலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் - சிங்கம்புணரி சாலையில் உள்ள இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு பிரம்ம முகூா்த்தத்தில் யாகசாலை வேள்வி தொடங்கப்பட்டது. தொடா்ந்து கோ- பூஜை மற்றும் பூா்ணாகுதிகளும், காலை 8 மணிக்கு கடப்புறப்பாடும் நடைபெற்றது. காலை 8.40 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து 9 மணிக்கு மூலவா் லிங்கேஸ்வரருக்கு, சிவனடியாா்கள் முன்னிலையில் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று திருவாசகம், தேவாரம் வாசிக்கப்பட்டது. பின்னா் மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சாதுக்கள், சிவனடியாா்கள், சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT